சிம்பு திரைப்படத்தின் டிரையிலர்!

Filed under: சினிமா |

நடிகர் சிம்பு நடித்துள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் டிரையிலர் நேற்று வெளியானது.

“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் டிரையிலர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இப்படத்தின் டிரையிலர் 2 நிமிடங்கள் உள்ளன. அதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் உள்ளன.

சாதாரண இளைஞன் ஒரு கொள்ளைக்கூட்டத்தில் இணைந்து படிப்படியாக உயர்ந்து டான் ஆகும் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் சிம்பு வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட இந்த படம் கௌதம் மேனனின் ஸ்டைலில் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இப்படம் நிச்சயம் சிம்புவிற்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று சொல்லலாம். நேற்று நடைபெற்ற டிரையிலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.