சிம்பு படத்தைப் பற்றி லோகேஷின் கருத்து!

Filed under: சினிமா |

நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்துள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

சிம்பு மற்றும் கவுதம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்தில் “நாயகன்” படத்தின் ரெபரன்ஸ் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. “மாநாடு” திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடித்துள்ள திரைப்படமான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இன்று ரிலீசாகியுள்ளது. சிம்புவின் “மாநாடு” படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று படம் ரிலீசான நிலையில் சிறப்புக்காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. திரைத்துறையை சேர்ந்த பலரும் படம் பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் இயக்குனர் லோகேஷ் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது “நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இயக்குனர் கௌதம் மேனன் கமல் சாரோட ரசிகர். அதனால் அவர் “நாயகன்” படத்தின் சில கதாபாத்திரங்களை “வெந்து தணிந்தது காடு” திரைப்டத்தில் வைத்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.