சிறுவனை துன்புறுத்திய கடைக்காரர் கைது!

Filed under: இந்தியா |

சமூக வலைதளங்களில் 9 வயது சிறுவனை தலைகீழாக தொங்கவிடப்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, சிறுவனை தொங்கவிட்ட கடைக்காரரும், வீடியோ எடுத்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் மொபைல் போன் கடையில் 9 வயது சிறுவன் மொபைல்போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து அச்சிறுவனை தலைகீழாக கிணற்றில் கட்டி தொங்கவிட்டு கடைக்காரர் சிறுவனை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் இதை அந்த கடையில் வேலை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். 9 வயது சிறுவனை தலைகீழாக தொங்க விட்ட கடைக்காரர் மற்றும் அதனை வீடியோ எடுத்த நபர் ஆகிய இருவர் மீதும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.