சிறைக்கு செல்லவும் தயார்; ராகுல் காந்தி

Filed under: அரசியல்,இந்தியா |

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் விரும்பினால் தான் சிறை செல்லவும் தயார் என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசினார். அதில், “நாடு முழுவதும் நான் மேற்கொண்ட பயணம் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்னும் நிறைவேறவில்லை, நடை பயணத்தின் போது இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய நடைப்பயணம் மக்கள் மீது அன்பு செலுத்தவே நடந்தது. நான் பாராளுமன்றத்தில் மோடி அதானி உறவு குறித்து பேசப்போவதில்லை. எனவே பாஜக உறுப்பினர்கள் பயப்பட வேண்டாம். அதுமட்டுமின்றி பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார்” என்று அவர் கூறியுள்ளார்.