சிறைக்கைதிகள் விடுதலை விவகாரம்: ஆளுநர் அனுமதி!

Filed under: அரசியல்,தமிழகம் |

ஆளுநர் சிறைக்கைதிகள் விவகாரத்தில் 31 கோப்புகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் 71 கோப்புகளில் 31 கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு விடுதலை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 39 கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்களின் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது வழக்கு பதிவு நடவடிக்கை தொடர்பான கோப்புகளையும் கூடுதல் ஆவணம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். ஏற்கனவே பல்கலைக்கழக வேந்தர் குறித்த கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன.