சிறை அதிகாரிகளின் தகவல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

சிறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண்ணை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் புழல் சிறையிலிருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும், அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்வையாளர்கள் பார்க்க புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.