சிலிண்டர் விலை சென்னையில் குறைய வாய்ப்பு!

Filed under: தமிழகம் |

கேஸ் சிலிண்டர் வர்த்தக பயன்பாட்டிற்கான விலை அதிகரித்த நிலையில் கடந்த மாதம் போல இம்மாதமும் குறைந்துள்ளது.

பெட்ரோலிய நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் வர்த்த கேஸ் சிலிண்டரின் விலை சில மாதங்களுக்கு முன்பாக விலை உயர்ந்தது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த மாதம் முதலாக வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதமும் வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது. இதனால் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2,009க்கு விற்பனையாகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வணிக சிலிண்டர் விலை ரூ.2045 ஆக இருந்தது. அதோடு வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை கடந்த மாதத்தின் விலையிலிருந்து எந்த ஏற்ற இறக்கமுமின்றி அதே ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வர்த்தக கேஸ் விலை குறைந்துள்ளது உணவகங்கள் நடத்தும் மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.