சிவகங்கையில் 144 தடை உத்தரவு!

Filed under: தமிழகம் |

நாளை முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை ஆணையர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேவர் நினைவு தினத்தை ஒட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மருது பாண்டியர்கள் மற்றும் தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் நாளை முதல் அதாவது அக்டோபர் 23 முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். எனவே இந்த நாட்களில் முன் அனுமதியின்றி மற்ற மாவட்ட மக்கள் சிவகெங்கை மாவட்டத்திற்குள் நுழைய அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.