“டான்” திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வரும் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன்- மற்றும் பிரியங்கா மோகன், எஸ். ஜே.சூர்யா, சூரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி பாடல் பாடிய இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அனிருத், ஜொனிதா காந்தி பாடிய “ஜாலிலோ ஜிம்கானா” என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் “பிரைவேட் பார்ட்டி” என்ற பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.