சிவகார்த்திகேயன் வழங்கிய ஆம்புலன்ஸ்!

Filed under: சினிமா |

நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் இளம் நடிகர். தற்போது இவர் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் தான் “டான்”. இத்திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில், தன் ஒவ்வொரு படம் ரிலீஸாவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் தன் தந்தையின் பெயரில் நடத்தி வரும் தாஸ் அறக்கட்டளை மூலம் எதாவதொரு சமூக சேவை செய்து வருகிறார். அதன்படி, இந்த முறை சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக ரூ.21 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை மாவட்டம் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார். இதற்கான விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.