சிவசேனாவை அடக்கிய மோடி-அமித்ஷா கூட்டணி !

Filed under: அரசியல்,இந்தியா |

amit_1

இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனது வலதுகையான அமித்ஷாவுடன் இணைந்து புத்திசாலித்தனமாக, அரசியல் காய்களை நகர்த்துவதாகக் கூறப்படுகிறது. மராட்டியத்தில் ஆணவத்துடன் அரசியல் நாடகம் ஆடிய சிவசேனாவை, அதன் குகையிலேயே கட்டிப்போட்ட துணிச்சலைப் பார்த்து மராட்டிய மக்கள் வியக்கிறார்கள். அத்வானியின் ஆதரவை பெற்ற சிவசேனா, மோடியை தங்கள் கீழ் ஆட்ட நினைத்ததின் விளைவு தற்போது ஆடிப்போயுள்ளார்களாம்.

மராட்டிய அரசியலில் சரத்பவார் அடித்த சிக்ஸர், மராட்டிய மக்களை அதிரச் செய்துவிட்டது. சிவசேனாவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வரும் சூழ்நிலையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார்கள். மராட்டிய மக்களின் நலன் என்று பீலா விட்டு, பில்டப் செய்த சிவசேனா, தற்போது கை ஏந்தி 10 அமைச்சர்களை பெற கெஞ்சுகிற சூழ்நிலையை நரேந்திரமோடி, அமித்ஷா கூட்டணி ஏற்படுத்தியது உண்மை. உண்மையில் காந்தியின் மூக்குக் கண்ணாடியை பார்த்த சிறுவர்களும் குழந்தைகளும் தொலைக்காட்சி பெட்டி முன்பு காந்திஜி என்று மகிழ்ச்சியுடன் கூவுகிற அதிசயம் தற்போதைய இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாரத பிரதமரின் காந்திய பற்று என்பது சுட்டெரிக்கும் உண்மை.

நரேந்திரமோடியின் எழுச்சி பா.ஜ.க.வின் சுயநல தலைவர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து சட்டசபை தேர்தல்களில் மோடி பெற்ற வெற்றிகள் அத்வானி ஆதரவாளர்களை கலக்கி உள்ளது. வரப்போகும் மந்திரிசபை மாற்றம் பலருடைய அரசியல் கணக்குகளுக்கு விடை கிடைக்கும் என்று நம்பலாம். தொடர்ந்து பா.ஜ.க. சட்டசபை தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் காங்கிரஸ் கட்சியை அலறவைத்துள்ளன என்பது உண்மை.
மராட்டியத்தில் செயல்படாத முதல்வராக இருந்த பிருத்விராஜ் சௌகானை ராகுல் காந்தி மாற்ற மறுத்துவிட்டதாக வதந்திகள் பரவின. சௌகானுக்கு எதிராக அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் எதிர்த்தபோதிலும் கட்சி அழிந்தாலும் பரவாயில்லை, நண்பன் தேவை என்ற மனப்பான்மையில் ராகுல் காந்தி செயல்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்க வைக்கிறதாம். அதேபோல் அரியானா முதல்வராக செயல்பட்ட ஹீடாவுக்கு எதிராக மாநில மக்கள் கொதித்து எழுந்த நிகழ்ச்சிகள் நடந்தன. அதை சோனியாகாந்தி அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறதாம். காரணம் மருமகனுக்கு பல வகைகளில் உதவிபுரிந்த நன்றியை பாராட்டி, காங்கிரஸ் கட்சியை பலிகொடுத்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

அதேபோல் ஜார்கண்டு, ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்போகும் என்று அடித்துக் கூறுகிறார்கள். டெல்லியிலும் பா.ஜ.க. தனது ஆட்சியை பிடிக்கும் என்று உறுதி கூறப்படுகிறது. அதே சமயம் பீகார், மேற்குவங்காளம் பா.ஜ.க.விற்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அதிபர் தன் பதவியை தக்கவைத்துக்கொள்ள அவசரமாக தேர்தல் நடத்துவதாக கூறப்படுகிறது. தமிழக அறிவாளிகளின் ஆலோசனையை கேட்டு நடவடிக்கை எடுத்த இலங்கை அதிபர் தற்போது தலையில் கைவைத்து அமர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் ராஜபக்சே கட்சி அனைத்து கட்சிகளுடன் விரோத மனப்பான்மையை கடைபிடித்து வந்ததாம். ஜெயலலிதா பதவி காலியானதும், இலங்கை அதிபருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி, தமிழ் இனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தார்களாம் தமிழக அறிவாளிகள். ஆனால், தமிழ் குலத்தின் எழுச்சி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக கிளர்ந்து எழுந்தது இலங்கையில் பலமாக அதிர்ந்ததாம். உலகநாடுகள் ஆதரவு ஜெயலலிதாவுக்கு கைகொடுக்க, தற்போது இலங்கை அதிபர் தப்பித்தால் போதுமடா சாமி என்று அலற ஆரம்பித்து உள்ளார். சீனாவிற்கு இந்திய கடல் பகுதியில் அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய அரசு, தமிழக எல்லைகளின் கடலோர பகுதிகளை பாதுகாப்பு அதிகரிக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறதாம். இதனால் நொந்துபோன இலங்கை அதிபர், பித்துப்பிடித்து அலையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக இலங்கை செய்திகள் வெளியாகி உள்ளன.