சிவில் சட்டம் குறித்து மத்திய அமைச்சரின் கருத்து!

Filed under: இந்தியா |

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

தற்போதிருக்கும் சிவில் சட்டத்தை மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்ற ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியபோது பொது “சிவில் சட்டம் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்பே அதன் பதவி காலம் முடிந்து விட்டது. பொது சிவில் சட்டம் குறித்து 22 ஆவது சட்ட ஆணையம் முடிவு எடுக்கலாம். நாடு முழுதும் கிரிமினல் குற்றங்களுக்கு மட்டும் ஒரே விதமான சட்டம் இருக்கிறது. சிவில் என்று சொல்லக்கூடிய திருமண உள்ளிட்ட வழக்குகளுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.