கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம்!

Filed under: இந்தியா |

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, கடந்த 14ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பின் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், அவருக்கு காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனை இருந்ததால் லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் கடந்த 21ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பின்பு அந்த மருத்துவமனையில் இருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் மாற்றப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில், அவருக்கு டெங்கு காய்ச்சலும் இருப்பதும் தெரியவந்தது. இதனால் அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஐசியூ வார்டில் உள்ள மனிஷ் சிசோடியாவிற்கு பிளாஸ்மா சிகிச்சையும் கொடுக்கப்பட்டுயுள்ளது. இதன் மூலம் அவருடைய உடல் நிலையில், முன்னேற்றம் அடைந்துள்ளது என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும், நார்மல் வார்டுக்கு மனிஷ் விரைவில் மாற்றப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.