சீரியல் நடிகர் வேதனை!

Filed under: சினிமா |

சீரியல் நடிகர்  “வாரிசு” படப்பிடிப்புக்கு சென்று அசிங்கப்பட்டதாக பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்த ரவிச்சந்திரன் என்பவர் அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேக்கப் எல்லாம் போட்டு படப்பிடிப்பு தொடங்க தயாரான நிலையில் திடீரென அவர் வேண்டாம் என்று இயக்குனர் வம்சி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நொந்துபோன ரவிசந்திரன் விஷயத்தை நடிகர் விஜய்யுடன் கூறப்போவதாக கூறியதையடுத்து படக்குழுவினர் அவரை சமாதானப்படுத்தி அன்றைய தினத்தின் சம்பளத்தை கொடுத்தனுப்பி உள்ளதாக தெரிகிறது. நடிக்க அழைத்து மேக்கப் எல்லாம் போட்ட பிறகு வேண்டாம் என்று கூறியது தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக ரவிச்சந்திரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.