சுசீந்திரனின் 20 ஆண்டு சினிமா பயணம்!

Filed under: சினிமா |

20 ஆண்டுகள் சினிமாவில் நிறைவுசெய்துள்ளதை சுசீந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுசீந்திரன் “வெண்ணிலா கபடி குழு” திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அடுத்தடுத்து “நான் மகான் அல்ல,” “ஜீவா” மற்றும் “பாண்டிய நாடு” உட்பட ஹிட் படங்களைக் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய படங்கள் தோல்வியாகவே அமைந்தன. இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் “வள்ளிமயில்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1980ம் ஆண்டு கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவதால் “வள்ளிமயில்” ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. சுசீந்திரன் சினிமாவுக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2003ம் ஆண்டு உதவி இயக்குனராக அறிமுகமான அவர் தற்போது “வள்ளிமயில்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். 20 வருடங்களை நிறைவு செய்துள்ளது குறித்து “சினிமாதான் எனக்கு எல்லாமே தந்தது. அனைவருக்கும் எனது நன்றி” என்று கூறியுள்ளார்.