சுதீப் ஸ்டைலில் முடிவெட்ட வேண்டாம்; ஆசிரியர்கள் வலியுறுத்தல்

Filed under: இந்தியா,சினிமா |

சலூன் கடைகளில் மாணவர்களுக்கு சுதீப் பாணியில் சிகை அலங்காரம் செய்ய வேண்டாம் எனகர்நாடக மாநிலம் சென்னப்பா சித்தராமப்பா நாவிக் பள்ளி ஆசிரியர்கள் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப். இவர் பின்னணி பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளார் எனப் பன்முக கலைஞராக இருக்கிறார். இவர், தாயவ்வ, கிச்சா, தம், நந்தி, சந்து, விஜய்யுடன் இணைந்து “புலி,” “நான் ஈ” உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சுதீப் “ஹெப்பிலி” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவரது சிகை அலங்காரம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. இவரது சிகை அலங்காரம் போன்று அங்குள்ள மாணவர்களும் தலைமுடியை வெட்டியதால், கர்நாடக மாநிலம் சென்னப்பா சித்தராமப்பா நாவிக் பள்ளி ஆசிரியர்கள் “சலூன் கடைகளில் மாணவர்களுக்கு சுதீப் பாணியில் சிகை அலங்காரம் செய்ய வேண்டாம்‘’ என்று வலியுறுத்தி வருகிறன்றனர்.