சூப்பர் ஸ்டாரின் பாராட்டில் நெகிழ்ச்சியான ஜெயம் ரவி!

Filed under: சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தைப் பார்த்த பிறகு ஜெயம் ரவியை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளது குறித்து, அவரே சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் குவித்துள்ளது. இப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “பொன்னியின் செல்வன்” படத்தைப் பார்த்துவிட்டு, இப்படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்துள்ள, ஜெயம் ரவியை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுபற்றி, ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில், “உங்களுடன் நடந்த ஒரு நிமிட உரையால் என் வாழ்க்கையில் புதிய உற்சாகத்தைத் தந்தது. நீங்கள் எனக்கு கூறிய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. படமும், என் நடிப்பும் உங்களுக்குப் பிடித்திருந்தது என்று கூறியிருந்தீர்கள் அதற்கு நன்றி’’ என பதிவிட்டுள்ளார்.