அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாக பரவி உள்ளது.
சூப்பர் ஸ்டாரை தினமும் பலரும் சந்தித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று ரஜினியை அஜித் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுபற்றி அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தபோது, “அஜித் மற்றும் -ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை. இத்தகவல் பொய்யானது. இதுகுறித்து வைரலாகி வரும் புகைப்படம் போலியானது” என்று தெரிவித்தார்.