சூப்பர் ஸ்டார் இன்டோவில் கமல் திரைப்படம்!

Filed under: சினிமா |

லைகா நிறுவனம் “இந்தியன் 2” திரைப்படத்தின் இன்ட்ரோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் பிரம்மாண்டமாக “இந்தியன் 2” திரைப்பட ஷூட்டிங் நடந்து வருகிறது. “இந்தியன்” படம் 3 பாகங்களாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்த பின், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகி இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது. “இந்தியன் 2” படத்தின் இன்ட்ரோவை நாளை மாலை 5:30 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்யவுள்ளார் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கமல்- மற்றும் ஷங்கர் கூட்டணியில் 2வது படமாக உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.