சூர்யா படத்தின் ஓடிடி கைமாறுகிறதா?

Filed under: சினிமா |

நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் படத்துக்கான பணிகள் இப்போது தாமதமாகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீரை நடிக்கவைக்க வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்திருந்தார். படம் இப்போதைக்கு தொடங்காது, கைவிடப்பட்டு விட்டது என பல வதந்திகள் பரவிய நிலையில் “விடுதலை” படம் இந்த ஆண்டு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்பட்டது. படத்தின் ஜல்லிகட்டு சீக்வென்ஸ்களுக்காக பல கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதையெல்லாம் லண்டனில் உள்ள ஒரு கிராபிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து இதுவரை உருவாக்கப்பட்ட காட்சிகளை மேற்பார்வையிட வெற்றிமாறன் லண்டனுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்காக முதலில் ஆஹா ஓடிடி நிறுவனம் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது ஜி சினிமாஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாகவும், அதற்காக தயாரிப்பாளர் தாணு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.