சூர்யா மற்றும் கார்த்தி நடிகர் அஜீத்துடன் சந்திப்பு!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத்தின் தந்தை மறைவிற்கு நடிகர் அஜித்தை நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அஜீத்தை நேரில் சந்தித்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அஜீத்தின் தந்தை பி.எஸ்.மணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார். அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விஜய் உள்ளிட்ட ஒரு சிலர் நேரில் சென்று அஜீத்துக்கு ஆறுதல் அளித்தனர். இன்று நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அஜீத் வீட்டிற்கு சென்று அவரது தந்தை மறைவிற்கு தங்களது மற்றும் தங்களது குடும்பத்தின் இரங்கலை தெரிவித்தனர்.