சென்னையிலிருந்து 500 சிறப்பு பேருந்துகள்!

Filed under: தமிழகம் |

தமிழ் புத்தாண்டு சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் தென் மாவட்ட மக்களின் வசதிக்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமை வருவதாலும் அடுத்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதாலும் சென்னையில் பணிபுரிந்து வரும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக 500 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் குறித்த தகவல்கள் மற்றும் முன்பதிவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் இணையதளத்தை சென்று அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.