சென்னையில் உள்ள இந்தியாவிற்கான மலேசிய தூதரகம் சார்பில் மலேசிய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

DSCN4383சென்னையில் உள்ள இந்தியாவிற்கான மலேசிய தூதரகம் சார்பில் மலேசிய சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டதுஇந்த விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

மலேசியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட்31-ம் தேதி “MERDEKA” என்று அழைக்கப்படும் மலேசிய சுதந்திர தினம் (National Day) கொண்டாடப்படுவது வழக்கம்மலேசியாவில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் தங்களுக்கு ஏற்ற தினங்களில் ஆண்டுதோறும் மலேசிய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கான மலேசிய தூதரகம் சார்பில் சென்னையில் உள்ள Park Sheraton Hotel-ல் மலேசிய சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டதுமலேசிய கான்சில் ஜெனரல் திருமதி.சித்ராதேவி இராமையா இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் திரு.ராதாரவிதிரு.சரத்குமார், திரு.வின்சண்ட் அசோகன்மற்றும் Indo Malaysia Tamil Chamber of Commerce தலைவர் திரு.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்விழா அரங்கில் இந்தியா மற்றும் மலேசியா நாடுகளின் தேசிய கொடிகள் வைக்கப்பட்டிருந்தனவிழாவின் துவக்கமாக இந்திய மற்றும் மலேசிய தேசிய கீதம் இசைக்கப்பட்டது குறிப்படத்தக்கது.

PHOTOS :