சென்னையில் போக்குவரத்து நெரிசல்!

Filed under: சென்னை |

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருப்போர் தனது சொந்த ஊருக்கு படையெடுப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பரும் அவதிக்குள்ளாகினர்.
பொங்கல் பண்டிகையின் விடுமுறைக்காக அவரவர் தனது சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களுக்கு சென்று கொண்டிருப்பதால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி மக்கள் கொண்டாட இருக்கும் நிலையில் இன்று மற்றும் நாளை ஏராளமான பொதுமக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர். இன்று மக்கள் தங்கள் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் நிறைய உள்ளன. ஒரே நேரத்தில் பல வாகனங்கள் செல்லத் தொடங்கியதால் பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதையடுத்து வாகனங்கள் மெதுவாக உற்பத்தி செல்வதாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன