சென்னையில் 2வது விமான நிலையம்!

Filed under: சென்னை |

சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விமான போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை மக்கள் பல ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்திருந்தது. இந்த நான்கு இடங்களில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களில் மத்திய அரசு பரிசீலனை செய்தது. இவற்றில் ஒன்றில் சென்னையின் இரண்டாவது விமான நிலையமாகும் என்று கூறப்பட்டது. குறிப்பாக சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைய அதிக வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறியிருந்தனர். சென்னையில் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமையவுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இறுதி செய்யப்பட்ட இடத்திற்கு மாநில அரசு இட அனுமதியை வழங்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.