செஸ் துவக்க விழாவை இயக்கும் முன்னணி இயக்குனர்!

Filed under: தமிழகம்,விளையாட்டு |

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்த போட்டியில் செஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் இந்த ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள் இந்நிகழ்ச்சிக்கு இசையமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் துவக்க விழா வீடியோ அனைத்து திரையரங்குகளிலும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.