சேமிப்புக் கிடங்கு இல்லாத திருமழிசை மார்க்கெட்… வீணாகும் காய்கறிகள்! விற்பனையும் மந்தம்

Filed under: தமிழகம் |

சேமிப்புக் கிடங்கு இல்லாத திருமழிசை மார்க்கெட்… வீணாகும் காய்கறிகள்! விற்பனையும் மந்தம்

சென்னையை அடுத்த திருமழிசையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டில் தினமும் 2 லட்சம் கிலோ அளவுக்கு காய்கறிகள் வீணாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் செயல்பட்டு வந்த கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து கொரோனா பரவ ஆரம்பித்ததால் அந்த மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து பழ மார்க்கெட் மாதவரத்துக்கும் காய்கறி மார்க்கெட் திருமழிசைக்கும் மாற்றப்பட்டன. ஆனால திருமழிசையில் சொல்லிக்கொள்ளும் படியான விற்பனை முதல் நாளில் இருந்தே இல்லை. திருமணம் உள்ளிட்ட விழாக்கள் நடக்காததால் மொத்த காய்கறி வியாபாரம் சுத்தமாக நடக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அங்கு காய்கறிகளை சேமித்து வைப்பதற்கும் சேமிப்புக் கிடங்கு இல்லாததால் தினமும் 2 லட்சம் கிலோ அளவுக்கு காய்கறிகள் வீணாவதாக சொல்லப்படுகிறது. இது வியாபாரிகளுக்கு மேலும் பாரத்தைக் கொடுத்துள்ளது. இதனால் மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டையே நிபந்தனைகளுடன் திறக்கலாமா என அதிகாரிகள் ஆலோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. வியாபாரிகளின் கோரிக்கையும் அதுவாகவே உள்ளது.