சைரன் ஓடிடியில் ரிலீஸ் ஆனது!

Filed under: சினிமா |

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவான “சைரன்” திரைப்படம் கடந்த மாதம் ரிலீசானது. மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விமர்சன ரீதியாகவும் எதிர்மறையான கருத்துகளையே பெற்றது.

இத்திரைப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். படத்தால் அவருக்கு சில கோடிகளாவது நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது. வரிசையாக ஜெயம் ரவியின் படங்கள் மோசமான வசூலை பெற்று வருகிறது. இப்படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. இப்படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்து இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. தேர்தல் நாளில் படம் வெளியாகியுள்ள பெரியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தாது. வரும் நாட்களில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.