சொமாட்டோவின் புதிய அறிமுகம்!

Filed under: உலகம் |

சொமாட்டோ நிறுவனம் சிறப்பு வாய்ந்த உணவுகளை நாடு முழுதும் டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு உணவு வகைகள் உண்டு. ஹைதராபாத் நகரத்திற்கு பிரியாணி, கொல்கத்தாவுக்கு ரசகுல்லா போன்றவை புகழ்பெற்ற உணவு முறையாகும். இந்தியா முழுதும் இனி டெலிவரி செய்ய சொமாட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் இத்தகவலை தெரிவித்துள்ளார். இம்முயற்சி வெற்றியடையும்பட்சத்தில் நாடு முழுவதும் இது விரிவாக்கப்படும். அதாவது நீங்கள் சென்னையில் இருந்துகொண்டே கொல்கத்தாவின் ரகுல்லாவை ஆர்டர் செய்ய முடியும். இதற்காக இந்தியாவின் 100 விமான நிலையங்கள் பயன்படுத்தப்படும். இத்திட்டம் உண்மையில் உணவு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு சிறப்பான திட்டமாகும். ‘இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்’ என்று இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.