சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

Filed under: அரசியல்,இந்தியா |

இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டில்லியில், உள்ள சர்கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து, கங்காராம் மருத்துவர்கள், ‘அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்றினால் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்த பின் 11ம் தேதி வீடு திரும்பினார்.