ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு!

Filed under: அரசியல்,உலகம்,தமிழகம் |

சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு ஜப்பான் சென்றுள்ளார் தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு ரஜினி ரசிகர்கள் வரவேற்பளித்த புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணம் செய்து உள்ளார். அவர் இந்த இரு நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலில் செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகிறார். இன்று காலை ஜப்பான் சென்ற தமிழக முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜப்பான் ரஜினி ரசிகர் மன்றத்தினர் வரவேற்றனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.