‘ஜவான்’ பட 2வது சிங்கில் ரிலீஸ்

Filed under: சினிமா |

‘ஜவான்’ படத்தின் 2 வது சிங்கில் இன்று வெளியாகியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி என முன்னணி தமிழ் நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மூலம் இந்தியிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் அனிருத். பாலிவுட்டிற்கு நுழையும் அனிருத்தின் முதல் படம் ‘ஜவான்’ படம். இதில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. சமீபத்தில், இப்படத்தின் முதல் சிங்கில் “வந்த இடம் என் காடு, நீதான் பலியாடு’ என்ற பாடல் ‘டி சீரீஸ்-தமிழ் யூடியூப்’ பக்கத்தில் வெளியிடப்பட்டு பல மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகவுள்ளது. “ஜவான்” படத்தில் ஷாருக்கான்,விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரின் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்தப் போஸ்டர்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. “ஜவான்” பட அப்டேட் வெளியானது. வரும் திங்கட்கிழமை ஜாவன் பட 2வது சிங்கில் ரொமான்டிக் பாடல் வெளியாகும் என்று ஷாருக்கான் தெரிவித்திருந்தார். அதன்படி, #Hayyoda என்ற ஜவான் பட 2 வது சிங்கிலை ஷாருக்கான் தன் டுவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். பிரியா, பாரா ஆகியோர் பாடியுள்ளனர். முதல் சிங்கில் போன்று இப்பாடலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இப்பாடல் பற்றி ஷாருக்கான் தன் டுவிட்டர் பக்கத்தில், “காதல் அளவிட முடியாததாகவும், கவலையற்றதாகவும், எல்லையற்றதாகவும் இருக்க வேண்டும். ஜவானின் காதலும் அப்படியே! #Hayyoda பாடல் இப்போது வெளியாகி உள்ளது’’ என்று தமிழில் பதிவிடுள்ளார்.