ஜவுளி உற்பத்தியாளர்கள் 2வது நாள் போராட்டம்

Filed under: தமிழகம் |

பின்னலாடை நிறுவனங்கள் நூல் விலை அதிகரித்துள்ள காரணத்தால் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.

கடந்த ஒரு வருடத்திற்குள்ளாக நூல் விலை 120 முதல் 150 வரை விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் நிலையில் நூலின் விலையை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தன. நூல் விலை உயர்வைக் கண்டித்து, ஜவுளி உற்பத்தியாளர்கள் 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர், கோவை, மாவட்டங்களில் நூல் விலை உயர்வை கண்டித்துக், ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது, 2 லட்சம் விசைத்தறிகள் இயக்காததால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.