ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவர் பலி!

Filed under: உலகம்,தமிழகம் |

தமிழக மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதன் என்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஜார்கண்டிலுள்ள ஆர்ஐஎம்எஸ் என்ற மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்திலேயே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவர் மதன் உடல் அவர் படித்து வந்த மருத்துவ கல்லூரி அருகிலேயே கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் மாணவர் மதனை யாராவது கொலை செய்து, எரித்து விட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். தமிழக மாணவர் ஒருவர் ஜார்கண்ட் மருத்துவ கல்லூரியில் பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.