ஜிஎஸ்டி வருவாய் உயர்வு!

Filed under: தமிழகம் |

மத்திய அமைச்சகம் தமிழகத்தில் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் 25% உயர்ந்திருப்பதற்காக கூறியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களை இந்த அரசு அறிவித்து வரும் நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டில் அக்டோபர் மாதத்தின் ஜிஎஸ்டி வருவாய் 25% உயர்ந்து ரூ.9540 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து, மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளதாவது: 2022ம் ஆண்டு, கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1,67,540 கோடி என்றும், இதற்கடுத்து, அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.1,51,718 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.