ஜியோவின் புதிய அறிவிப்பு!

Filed under: இந்தியா,தமிழகம் |

ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் 8 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் இந்தியா முழுவதும் மேலும் 34 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுதும் மொத்தம் 365 நகரங்களில் 5ஜி சேவை இயங்கி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 22 நகரங்களில் 5ஜி சேவை இருக்கும் நிலையில் தற்போது மேலும் எட்டு நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 30 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம், சிவகாசி, ஆம்பூர் உள்பட 8 முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.