ஜெயம் ரவியின் நெகிழ்ச்சிப் பதிவு!

Filed under: சினிமா |

கடந்த 2003ம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார் ஜெயம் ரவி. அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி “பேராண்மை,” “தனி ஒருவன்” ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.

சமீபத்தில் அவர் நடிப்பில் “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவரின் முதல் படம் 2003ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி ரிலீசானது. இப்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து “என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் நான் மிகுந்த நன்றியுணர்வு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான இதயத்தை உணர்கிறேன். எனது ரசிகர்கள், பத்திரிகைகள், ஊடகங்கள், சக நட்சத்திரங்கள், நண்பர்கள் மற்றும் எப்போதும் எனது குடும்பத்தினரின் நிலையான அன்பிற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். சிறந்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்களுடன் நான் பணிபுரியும் பாக்கியம் கிடைத்தது, உங்கள் படைப்புகளை என்னிடம் ஒப்படைத்து, உங்கள் கதைகளை உயிர்ப்பிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.