ஜெயிலர் திரைப்படத்தில் பிரபல நடிகர்!

Filed under: சினிமா |

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படமான “ஜெயிலர்” திரைப்படத்தில் வில்லன் நடிகர் இணைந்துள்ளார்.

“ஜெயிலர்” போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “ஜெயிலர்” படத்தில், பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள நிலையில் இப்போது, இப்படத்தில் வில்லன் நடிகர் விநாயகன் இணைந்துள்ளார். இவர் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “திமிரு” படத்தில் விஷாலுக்கு ஸ்ரேயா ரெட்டியின் உதவியாளராக நடித்தவர் விநாயகன். இவர், தனுஷின் “மரியான்” உட்பட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” படத்திலும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில், மலையாள சினிமாவில் முக்கிய கேரக்டர்களின் நடித்து வந்த அவர், ரஜினியின் “ஜெயிலர்” படத்தின் இணைந்துள்ளார். இப்படத்திலும் அவருக்கு முக்கிய கேரக்டர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.