“ஜெயிலர்” படம் பற்றி ரம்யா கிருஷ்ணன்!

Filed under: சினிமா |

இன்று உலகம் முழுதும் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.”

ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. “ஜெயிலர்” படம் காலை 9 மணிக்குத்தான் முதல் ஷோ ஆரம்பமானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் என்ன ரெஸ்பான்ஸ் உள்ளது? படம் எப்படி உள்ளது? என இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள ரம்யா கிருஷ்ணனிடம் செய்தியாளின் கேள்விக்கு, “படம் பிளாக்பஸ்டர் எனக்குப் புல்லரிச்சிட்டிருக்கு. படம் சூப்பர்’’ என்றார். படையப்பா படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் நடித்துள்ளீர்கள்? என்று கேள்விக்கு, “ஹாட்ரிக். 100 சதவீதம் ஹாட்ரிக். ஃபர்ஸ்ட் டைம் ஃபைர்ட் ஷோ இதுவே எனக்கு முதல்முறை நன்றாக என்ஜாய் செய்தேன். தலைவர் தலைவர் தான். இப்படம் பான் இந்தியாவுக்கு மேல போகும். “படையப்பா” படத்தில் நீலாம்பரியாக ரஜினியுடன் சேரவில்லை.ஆனால், இப்படத்தில் அவரது மனைவி விஜியாக நடித்துள்ளேன். “ஜெயிலர்” பார்ட் 2 வந்தால், இன்னும் வேற பண்ணலாம்” என்று கூறியுள்ளார். ரம்யா கிருஷ்ணன், ரஜினியுடன் “படையப்பா,” “பாபா” படத்திற்குப் பிறகு “ஜெயிலர்” படத்தில் 3வது முறையாக இணைந்து நடித்துள்ளார்.