ஜெ.வுக்கு எதிராக தெலுங்கு அதிகாரிகள்!

Filed under: இந்தியா,தமிழகம் |

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தற்போது சட்ட உலகத்தில் பல கோணங்களில் அலசப்படுகிறது. தனி நபர்களின் உணர்ச்சி கொந்தளிப்பில் சட்ட விதிகளை ஆராயாமல் அளித்த தீர்ப்பா? இல்லை கடுமையான சட்டவிதிகளை ஒட்டுமொத்தமாக திணித்து அரசியல் வாழ்வை முடிக்கும் தீர்ப்பா? என்ற பட்டிமன்றம் நடக்கின்றதாம்.

           தனிநபர்களின் உணர்ச்சி கொந்தளிப்பில் சட்டத்தின் அடிப்படையில் ஆராயப்பட்ட ஆவணங்கள் இந்தத் தீர்ப்பில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறதாம். அதாவது முரண்பாடுகள் அதிகம் தென்படும் சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக ஜெயலலிதா அணிந்த புடவைகள், காலணிகள் 60 லட்சத்திற்கும்மேல் கணக்கிடப்பட்டு குற்றத்தின் கீழ் சேர்க்கப்பட்டதாம். அதை நீதிபதி தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் 29 கோடிக்கு வருமான வரி தாக்கல் செய்யப்பட்டு, வருமான வரித்துறை ஒப்புதல் அளித்ததை நீதிபதி மறுத்து உள்ளதாக கூறுகின்றன.

                  மேலும் தமிழக அதிகாரிகள் தங்கள் சட்ட அறிவினை பயன்படுத்தி, அ.தி.மு.க. தலைவிக்கு ஆதரவாக பரிந்துரை செய்து இருந்தார்களாம். ஆனால் அந்த கருத்துக்களை நீதிபதி தள்ளுபடி செய்தது மட்டுமின்றி கண்டனம் தெரிவித்து இருப்பதாக சட்ட உலகம் கூறுகிறது. மேலும் ஜெ. வீட்டில் நால்வரும் இருந்தது ஊழல் புரியத்தான் என்ற சட்டப்பிரிவினை மேற்கோள்காட்டி நீதிபதி தீர்ப்பு அளித்து உள்ளாராம்.

                       இந்திய நாட்டில் உள்ள எந்த ஒரு அரசியல் தலைவர் வீட்டிலும் குறைந்தது 6 அல்லது 7 பேர் பணிபுரிவது வழக்கம். அவர்கள் செய்கின்ற தனிநபர் தவறுகள், அரசியல்வாதியை பொருட்படுத்தும் என்ற புதிய காரணம் கூறப்பட்டு இருப்பது கண்டு சட்ட உலகம் நகைக்கிறதாம்.

                           ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு, அவர் சிறையில் நடந்து கொண்ட விதம் கர்நாடக மக்களின் இதயங்களில் அனுதாப அலையை அதிகரித்து உள்ளதாம். மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மனைவி 23 கோடி ரூபாய் ஊழலில் சிக்கி உள்ளதாக வதந்திகள் பரவுகின்றன. அவர் மீது பாகல்கோட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

                             மேலும் மத்திய அமைச்சர் சதானந்த கௌடாவின் மகன் மீது காதலியை ஏமாற்றிய வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்களாம். அதேபோல் மகாராட்டிர பாராளுமன்ற உறுப்பினர் 100 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த விவரம் சமுதாய வலைகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறதாம். ஜெயலலிதா பிணையில் விடுபடக்கூடிய சட்ட விதிகள் அதிகம் தென்படுகிறதாகக் கூறுகிறார்கள். ஆனால் தனி நபர்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிணையில் விடுபட காலம் தாழ்த்தும் உத்தியை கர்நாடகம் கடைபிடிக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாம்.

                  ஆனால் கர்நாடக அரசியல்வாதிகளின் அரசியல் அழுத்தங்கள் கர்நாடக முதல்வரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஏற்கனவே பதவி பறிபோகும் சூழ்நிலையில் உள்ள கர்நாடக முதல்வர், தற்போது ஜெயலலிதா பிரச்னையில் கடுமையாக சிக்கிக்கொண்டு அலறுகிறாராம். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சிக்கவைத்த அதே சட்ட விதிகள், தற்போது ஜெயலலிதாவுக்கு காரணம் காட்டி இருப்பதாக கர்நாடக சட்டத்துறை கூறுவதாக கர்நாடக பா.ஜ.க. தரப்பு கூறுகிறதாம்.

                            தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தற்போது குரல் எழுப்பப்படுகிறது. தெலுங்கு பேசும் தமிழக அரசியல்வாதிகள் ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்ற சதித்திட்டம் தீட்டி உள்ளதாக பரவலாக தலைநகரில் கிசுகிசுக்கப்படுகிறது. தெலுங்கானா மற்றும் ஆந்திரா பிரிவினையின்போது நடந்த வன்முறை செயல்கள் இந்த தமிழக அரசியல்வாதிகளுக்கு மறந்துபோய் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகத்தை அடக்கி ஆள ஆந்திர அரசியல்வாதிகளின் உச்சகட்ட சதிச்செயல் என்ற குற்றச்சாட்டு எழுகிறதாம்.

                                      தமிழக பா.ஜ.க. ஆந்திர பா.ஜ.க. தலைவர்களுக்கு தமிழக நலன்களை அடகுவைத்ததை சுட்டிக்காட்டுகிறார்களாம். தமிழினத்துரோகிகள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றவும், தங்களுக்கு புகழ் கிடைக்கவும் தமிழகத்தைக் காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களாக மாறி உள்ளதைக் கண்டு தமிழ்க்குலம் கொதிப்படைந்து உள்ளதாம்.

                                அ.தி.மு.க. தலைவி தினசரி வணங்கும் திருவரங்கம் ரங்கநாதர் 3 முறை திருவரங்க கோவிலில் அ.தி.மு.க. தலைவிக்கு எச்சரிக்கை விடக்கூடிய நிகழ்ச்சிகளை நடத்தியதாக திருவரங்கம் கோவில் ஊழியர்கள் கூறுகிறார்களாம். அதனை புரிந்துகொண்ட சுயநல பட்டர்கள் மற்றும் இந்து அறநிலைய அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு எடுத்துச்சொல்ல தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. நீதிபதி தீர்ப்பில் சுமார் 8 இடங்களில் சட்ட விதிகள் தனி நபர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பில் எதிராக வழங்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் டெல்லி சட்ட உலகத்தில் விவாதிக்கப்படுகிறதாம். தமிழக சட்ட அறிவுகள் தற்போது மழுங்கிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாம்.

                            தருண்விஜய் பா.ஜ.க. வடஇந்திய பாராளுமன்ற உறுப்பினர். தமிழ் மொழி மீதும், தமிழர் மூலம் அதிக மதிப்பைக்கொண்டு உள்ளவர். தேசியக்கவி பச்சைத்தமிழன் பாரதியார் வாரணாசியில் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற பெரும் முயற்சி எடுத்துள்ளார். அதற்கு தமிழ், தமிழ் என்று மாரடித்து தமிழ் குலத்தை ஏமாற்றிய தமிழக தலைவர்கள் ஆதரவு கொடுக்கத் தயங்குவதாக தலைநகரில் நகைக்கிறார்களாம்.
கர்நாடக இசையில் பாரதியார் பாடல்களை பாடியவர்களை அழகுபடுத்தி பார்க்கும் தமிழக இசைச்சங்கங்கள் பச்சைத் தமிழன் பாரதியாருக்கு தருண்விஜய் அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு ஆதரவு தர தயங்குவது கண்டிக்கத்தக்கது. தியாகையருக்கு முன்பே நாரதர் மனிதன் உருவில் வந்து தமிழ் தெய்வப்பாடல்களை அளித்தவர் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர். அவரது பஞ்சரத்ன கீர்த்தனைகள் தெய்வத்தன்மை வாய்ந்தவை.

                          ஆனால் தெலுங்கு மொழியை உயர்த்தி தமிழ் பாடல்களை பாடுவதை கேவலமாக நினைக்கும் பாடகர்களுக்கு அடிமையாகி விட்டது தமிழ் இசைச் சங்கங்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. தமிழ் பாடல்கள் பாபு கைலாயம் சென்ற மகான்களும், திருமாலிடம் சென்ற ஆழ்வார்களும் தமிழகத்தில் தான் அதிகம். தமிழன் என்று தமிழ்குலத்தை ஏமாற்றும் தமிழ் கயவர்களை தமிழ் உலகம் இனம் கண்டு விட்டதாகக் கூறப்படுகிறது.