ஜெ.வை ஏமாற்றும் அதிகாரிகள் கூட்டணி!

Filed under: தமிழகம் |

IMG_9113திருவரங்கம் தொகுதி ராசியில்லாதது என்ற புதிய கண்டுபிடிப்பை ஊடகங்கள் மூலம் தெரிவித்து தங்கள் அறியாமையை வெளிப்படுத்தி உள்ளார்களாம். அருள்மிகு ரங்கநாதபெருமாள் தினமும் உலவுகின்ற திருத்தலம். பூலோக வைகுண்டம் என்ற பெயர் பெற்றது. அ.தி.மு.க. தலைவியை புகழின் உச்சியில் கொண்டு சென்ற புண்ணியத்தொகுதி. உண்மையில் ரங்கநாதபெருமாளை தன் ஆளுகையின் கீழ் கொண்டுவர முயற்சி செய்தவர்களாக அறங்காவலர்களை சுட்டிக்காட்டி குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்து சமய ஆணையர் திருவரங்கம் கோவிலில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர் என்கிறார்கள். இவரது கண் அசைவில் திருவரங்க கோவில் நிர்வாகம் செயல்படுகிறதாம். தனியார் தொழிலில் புகழ்பெற்ற தற்போதைய அறங்காவலர்கள், திருவரங்கம் கோவில் நிர்வாகத்தை தங்கள் நிறுவனத்தின் கிளையாக நினைத்து செயல்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதாம். வைணவ வைதீக முறைகள் அறியாத சுயநலபட்டர்கள். அரங்கனுக்கு சேவை செய்ததன் விளைவு அரங்கனின் கடும் கோபத்திற்கு உள்ளாகவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியதாம். முதலில் ரங்கனின் திருப்பாதத்தில் லைட்டை விழுந்ததாம். மலையாள மாந்திரீகர்களை அழைத்து பரிகார பூஜை செய்தார்களாம். பிறகு முறையான பூஜைகள் செய்யாமல் பாத ஓட்டை அடைக்கப்பட்டு உள்ளதாம். மறுபடி அரங்கன் பூந்தேரில் பவனி வந்துள்ளார். அப்போது பூந்தேரின் அச்சு முறிந்த சம்பவம் பெரும் பரபரப்புக்கு உள்ளாயிற்று. இதை சுயநல பட்டர்களும், அறங்காவலர்களும், காசுக்கு பணிந்த அதிகாரிகளும் அலட்சியம் செய்துள்ளார்கள். கடைசியில் அரங்கனை முறையாக வலம்வர தடுத்து அப்பிரதட்சணமாக சுற்ற ஆணவத்துடன் கட்டளை இட்டனர். இது நமது நெற்றிக்கண்ணில் வெளிவந்தவுடன் உடனே மறுப்பு முறையாக வலம்வர கட்டளை இட்டுள்ளார்கள்.

அனைத்து தேவர்களும் இரவில் அரங்கனுக்கு பூஜை செய்வது இன்றும் நடக்கிறது. ஆனால் தங்கள் பணபலத்தால் அரங்கனை அடக்க நினைத்த கயவர்களால் ஜெயலலிதாவுக்கு சோதனை ஏற்பட்டது. பலமுறை ஜெயலலிதாவை சென்றடைய எடுத்த முயற்சிகள், அவரது உள்வட்டத்தால் அலட்சியப்படுத்தப்பட்டு அவரது எதிராக சதிவலை பின்னப்பட்டு சிக்கலில் மாட்டப்பட்டு வெற்றி அடைந்தது ஒரு இடைவேளை சம்பவம் என்கிறார்கள். தற்போதைய அதிரடி தேவையாக அ.தி.மு.க. தலைவிக்கு விசுவாசமிக்க அதிரடியாக செயல்படக்கூடிய ஆட்சியாளர்கள், உண்மையாக உழைக்கக்கூடிய கட்சி செயலாளர்கள், தொண்டர்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஊழியர்கள் என்ற பட்டியல் எடுக்கிறார்களாம். திருவரங்கம் ரங்கநாதர், மேட்டு அழகிய சிங்கர் என்ற நரசிம்மர் திங்கள் பூரண அருளை தமிழக அ.தி.மு.க. தலைவிக்கு அளிப்பார்கள் என்ற கருத்து உலவுகிறதாம்.

அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஆட்சிக்கட்டிலில் ஏறும் ஜெயலலிதா, செப்டம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடத்தி வரலாறு காணாத வெற்றியை பெறுவார் என்று மேட்டு அழகியசிங்கரின் அருள்வாக்கு கூறுவதாக நம்மிடம் தெரிவித்துள்ளார்கள். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு 5 இடங்களில் சரியான முறையில் வாதாடினால், தவிடுபொடியாகும் என்று டெல்லி சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.