ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி!

Filed under: சினிமா |

இயக்குனர் பிரேம் குமார் “96” வெற்றிப்படத்தை கொடுத்தவர். அவர் தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி தாடி வளர்த்துள்ளார் கார்த்தி. படத்தில் கார்த்திக்கு ஹீரோயின் இல்லை என்றும், அவருக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களே படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே கார்த்தியின் “கைதி” திரைப்படத்தில் ஹீரோயின் இல்லாமல் நடித்திருந்தார். இதற்கிடையில் கார்த்தி நடித்து வந்த நலன் இயக்கி வரும் “வா வாத்தியாரே” படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. “பிரேம்” படத்தை நடித்து முடித்த பின்னர் மீண்டும் நலன் இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என சொல்லப்படுகிறது.