டன்கி முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

Filed under: சினிமா |

கடந்த சில ஆண்டுகள் நடிகர் ஷாருக் கானுக்கு மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் பிளாப்பாகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

2023ம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீசான “பதான்” மற்றும் “ஜவான்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டானதோடு 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய “டன்கி” திரைப்படம் நேற்று ரிலீசானது. படம் ரிலீசானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் முதல் நாளில் இந்த படம் 30 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வியாழக்கிழமை வேலைநாள் என்பதால் இந்த வசூல் குறைவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.