“டான்” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரூபாய் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்தது. இந்நிநிலையில் இந்த படம் ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக கூறப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படம் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை எட்டி விடும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்” திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் “டான்” படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் காட்டில் மழைதான்.