டாஸ்மாக்கில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞர்!

Filed under: தமிழகம் |

மதுபானங்களை பறித்துச் செல்ல திருச்சி டாஸ்மாக்கில் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார் ஒரு இளைஞர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலையில் திருச்சி மாவட்டத்தில் ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரு இளைஞர் வந்து ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, மதுபானங்களுக்கு காசுகொடுக்காமல் நாளை கொடுப்பதாக அவர் அதை எடுத்துச் சென்றார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.