டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்!

Filed under: தமிழகம் |

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 852 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பானங்களை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாய்வில் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என மொத்தம் 852 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வு செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கோடியே 60 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.