டிஆர் பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறாரா?

பாஜகவில் டிஆர் பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணியை இணைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார் டி.ஆர்.பாலு. இவர் திமுகவின் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டு வருகிறார். டி.ஆர்.பாலு தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா ஏற்கனவே அமைச்சராகவுள்ளார். டி.ஆர்.பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணியை பாஜகவுக்கு இழுக்க தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் டி.ஆர்.பாலுவுக்கும் மனோன்மணிக்கும் தற்போது ஒற்றுமையான சூழ்நிலை இல்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் உள்ள நிலையில் டி.ஆர்.பாலுவின் மகளும் பாஜகவில் இணைவாரா? அதனால் திமுகவுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பது அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். இது குறித்த செய்தி இணையத்தில் கசிந்து வரும் நிலையில் திமுக தலைமை அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.