டிக் டாக் மூலம் கைதான சாராய வாலிபர்!

Filed under: தமிழகம் |
நாகை, மே 5
மூர்த்தி

தமிழ்நாட்டில் ஊரடங்கு சட்டத்தில் மதுபான கடைகள் மூடிய நிலையில் மது பிரியர்கள் ஒரு குவாட்டர் 300க்கு கூட கிடைக்காத நிலையில் பரிதவித்து வருகின்றனர்.

அருகில் உள்ள காரைக்கால் பகுதியில் இருந்து கடத்தி வர முயற்சித்தாலும் அந்த அரசாங்கம் கேமிரா மூலம் கண்காணித்து வருவதால் கடையில் உரிமையாளர்களின் உரிமை ரத்தாகி விடும் என்ற பயத்தில் உள்ளார்கள்.

நாகப்பட்டினம் அருகே பொய்யூர் கிராமத்தில் பூஞ்சோலை என்கிற தமிழ்செல்வன் தன் வீட்டில் எரிசாராயம் காய்ச்சுகின்ற தொழிலை ஆரம்பித்துள்ளார். தொழிலும் வெகு விரைவாக விற்பனை ஆனதால் சாராயம் காய்ச்சுவதை வீடியோ எடுத்து அதில் ஆண்டவன் யாரையும் விட்ட தில்லை வாழ்க்கையின் வட்டத்திலே என்ற பாடலையும் இணைத்து டிக் டோக் சமூக வலை தலையங்களில் வெளியிட்டார், இதை பார்த்த வேளாங்கன்னி போலீஸார் அதர்ச்சியடைந்தார், நாதை மது விலக்கு அமல் பிரிவு போலிஸார் விரைந்து சென்று தமிழ் செல்வம் என்கிற பூஞ்சோலையை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். மணலுள் மூழ்கி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி உண்மையானது.