டிடிவி தினகரன் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்து !

Filed under: தமிழகம் |

கருணையே வடிவான  இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

துரோகத்தால் சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர் உயிர்த்தெழுந்து வந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் கொண்டாடுகிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் அவரவர் இல்லங்களில் இருந்தபடியே இறைவனை வழிபட்டு, பெரும் துன்பத்தில் இருந்து மனிதகுலம் விடுபடவேண்டும் என்கிற பிரார்த்தனையை முன்வைத்திடுவோம்.

“உன் மீது, நீ அன்பு செலுத்துவது போல பிறர் மீதும் அன்பு செலுத்துவாயாக” என்று மனித நேயத்தின் மாண்பினையும், அன்பு செலுத்துவதன் அவசியத்தையும் எடுத்துரைத்த இயேசு பிரானின் வார்த்தைகளைக் கடைபிடிப்போம். அவர் போதித்த தியாகத்தை, கருணையைச் சொல்லிலும் செயலிலும் வைப்போம். சமூக நன்மைக்காக தனிமனித இடைவெளியைப் பின்பற்றி விலகியிருந்தாலும், உள்ளங்களால் இணைந்திருப்போம்.

இந்த நன்னாளில் கிறித்துவ மக்கள் மட்டுமல்லாமல், எல்லோரும் நினைப்பதைப் போல ‘தற்போதைய துயரத்திலிருந்து  அனைவரும் மீண்டெழுந்து ஆரோக்கியத்தோடும், ஆனந்தத்தோடும் வாழ வேண்டும் என்கிற நம்பிக்கை மெய்யாகிட’ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

– டிடிவி தினகரன்