டிரம்ப் மீது பாலியல் புகார்!

Filed under: உலகம் |

பெண் எழுத்தாளர் ஒருவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது பாலியல் புகாரளித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் தற்போது பெண் எழுத்தாளர் ஜூன் கரோலி என்பவர் அவர் மீது பாலியல் புகாரளித்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டில் மன்ஹாட்டன் என்ற பகுதியில் ஒரு கடையில் உடை மாற்றும் அறையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியபோது, “டிரம்ப் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன். இவ்வழக்கு அடுத்த ஆண்டு விசாரிக்கபடலாம்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே மாடல் அழகி ஒருவர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். தற்போது பெண் எழுத்தாளர் ஒருவரும் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.